/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தகவல் அறியும் உரிமை சட்டம் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு
/
தகவல் அறியும் உரிமை சட்டம் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு
தகவல் அறியும் உரிமை சட்டம் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு
தகவல் அறியும் உரிமை சட்டம் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு
ADDED : அக் 30, 2025 01:50 AM
குமாரபாளையம்,  குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தகவல் அறியும் உரிமை சட்ட  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழிகாட்டுதல்படி, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள்  நடத்தப்பட்டன. முதல்வர்(பொ) ரகுபதி தலைமை வகித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த முக்கியத்துவத்தை விளக்கி, சமூக நலனுக்காக அந்த சட்டம் வழங்கும் அதிகாரம், பொறுப்புகள் பற்றி பேசினார்.
மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.  மாணவர்களுக்கிடையே மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது. இதில் பல மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முக்கியத்துவத்தை, பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி எடுத்துரைத்தனர். மேலும், வினாடி-வினா, கட்டுரை போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.