/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.48 கோடியில் சாலை அமைக்கும் பணி
/
ரூ.1.48 கோடியில் சாலை அமைக்கும் பணி
ADDED : டிச 15, 2024 03:07 AM
ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், எம்.பி., நிதியின் கீழ் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா, நேற்று நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கலந்துகொண்டார்.
முத்துக்கா-ளிப்பட்டி, பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகு-தியில், ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.அதை தொடர்ந்து, பொன்குறிச்சி பகுதியில், 8.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டடத்-திற்கு அடிக்கல் நாட்டினார். ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி தலைவர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.