ADDED : ஜன 03, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், ஜன. 3-
வெண்ணந்துார் பஸ் ஸ்டாப் அருகே, சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
வெண்ணந்துார் பஸ் ஸ்டாப், ராசிபுரம் ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் தினமும் ஏராளமான பஸ்கள், லாரிகள் மற்றும் டூவீலர்கள் செல்கின்றன. பஸ் ஸ்டாப் அருகே சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கசிவால் சாலை சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு, கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் மழை நீர் தேங்குவதால், டூவீலரில் செல்லும் பயணிகள் அந்த இடத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

