/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
/
ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ADDED : ஆக 05, 2025 01:27 AM
சேந்தமங்கலம், எருமப்பட்டி அருகே, சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட, நாமக்கல் - -துறையூர் சாலையில், ரெட்டிப்பட்டியிலிருந்து எருமப்பட்டி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதை கட்டுப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையை விரிவாக்கம் செய்ய, அரசிடம் நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டு முதல் கட்டமாக, 9.20 கி.மீ., துாரத்திற்கு, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது தடுப்பு சுவர் அமைத்தல், சிறு பாலம் கட்டுதல், சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இப்பணியை, சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். கோட்ட பொறியாளர் குணா, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.