/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாதை ஆக்கிரமிப்பு: உண்ணாவிரத போராட்டம்
/
பாதை ஆக்கிரமிப்பு: உண்ணாவிரத போராட்டம்
ADDED : செப் 19, 2025 01:46 AM
எலச்சிபாளையம் ;எலச்சிபாளையம் அருகே, மடையங்காட்டுபுதுார் கிராமம், மோலக்காடு பகுதியில் தனிநபர் ஒருவர், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொது தடத்தில் கற்களை கொட்டி ஆக்கிரமிப்பு செய்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பொதுப்பாதையில் கொட்டப்பட்டிருக்கும் கற்களை அகற்றி, கற்களை கொட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று, எலச்சிபாளையம் முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.ஐ.,கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், வரும், 23ல் திருச்செங்கோடு தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.