/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதுச்சத்திரம் யூனியனில் சாலையின் தரம் சோதனை
/
புதுச்சத்திரம் யூனியனில் சாலையின் தரம் சோதனை
ADDED : ஆக 07, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 64.86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதுச்சத்திரம் யூனியன், கதிரா நல்லுார் பஞ்.,ல், 54.68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தார்ச்சாலையின் தரம் குறித்து, கலெக்டர் உமா சோதனை செய்தார். தொடர்ந்து, ஏளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளின் வருகை விபரம், மருந்து பொருட்களின் இருப்பு, டாக்டர்கள், நர்சுகளின் வருகை விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.