/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 30, 2025 01:51 AM
நாமக்கல், நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியின் குடிமக்கள் நுகர்வோர்  மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகிய அமைப்புகள் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்ட தொடர்பு அலுவலர்  ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: விலைமதிக்க முடியாதது மனித உயிர். தினமும் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. வாகனத்தை மிக வேகமாக இயக்குதல்; சாலை விதிகளை மதிக்காமல் இருத்தல்; தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்குவது; மொபைல் போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது போன்றவையே சாலை விபத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. சாலை விதிகளை கடைப்பிடித்தால், விபத்துகளை பெரும்பாலும் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து,  சாலை பாதுகாப்பு பயிற்சியாளர் மதுரை நரசிம்மமணி, சாலை விபத்துகள் எவ்வாறு நடக்கிறது;   சாலை குறியீடுகளின் நோக்கம், சாலை பாதுகாப்பு வாசகங்கள் குறித்து வீடியோ மூலம் விளக்கினார்.  ஒருங்கிணைப்பாளர்கள் தேவி, கோகிலா, கலைவாணி, ஹேமலதா, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

