/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி
ADDED : பிப் 23, 2024 01:43 AM
நாமக்கல்;சாலை பாதுகாப்பு குறித்து, மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட அளவிலான போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சாலை பாதுகாப்பு மன்றங்களின் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர், போட்டியை துவக்கி வைத்தனர்.
சாலை பாதுகாப்பு குறித்து, நாமக்கல்லில் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகள் அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, பின் வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், தேர்வானவர்களுக்கு, நேற்று மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, குறு வாசகம் அமைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு, மாவட்ட கலெக்டரால் சான்றிதழ், பரிசு வழங்கப்பட உள்ளது.