/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 03, 2026 08:03 AM
குமாரபாளையம்: தமிழக போக்குவரத்து துறை சார்பில், ஜன., 1 முதல் 31 வரை, சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர் மாதவன் அறிவுறுத்தல்படி, குமாரபா-ளையம் அனைத்து ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் சங்கம் சார்பில் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில், சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு பேரணி, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் துவங்கியது.
இன்ஸ்பெக்டர் தவமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் பேரணியை துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதில், வழிநெடுக சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்-டது. இந்த பேரணியில், அனைத்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்-வாகிகள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

