/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை பாதுகாப்பு வாரம்: விழிப்புணர்வு பிரசாரம்
/
சாலை பாதுகாப்பு வாரம்: விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 16, 2024 10:34 AM
ராசிபுரம்: சாலைப்பாதுகாப்பு வாரத்தை ஒட்டி போக்கு வரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
ஜனவரி, 15ம் தேதி முதல், பிப்ரவரி, 14ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விபத்தில்லாமல் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொண்டு நிறுவனங்கள் விளையாட்டு அமைப்புகள், சுகாதார அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராசிபுரத்தில் ஆண்டகலூர்கேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு
பிரசுரம் வழங்கப்பட்டன. அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள், அரசு கல்லூரி மாணவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியதுடன் சாலையில் எப்படி பாதுகாப்பாக, கவனமாக செல்ல வேண்டும் என்பதை விளக்கி கூறினர்.
இந்நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., விஜயகுமார், நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர் ஜெகதீஸ்குமார், ஆர்.டி.ஓ., முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.