/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி நுாதன ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி நுாதன ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி நுாதன ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி நுாதன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 01:34 AM
நாமக்கல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தீப்பந்தம் கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல்-மோகனுார் சாலையில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை நீதிமன்ற தீர்ப்பின்படி, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மேல்முறையீடு செய்யக்கூடாது. சாலை பணியாளர்களில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் கருணை வேலை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும்.
மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியார் மயப்படுத்துதலை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.