ADDED : மார் 05, 2024 12:08 PM
அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல்லில், சாலைப்பணியாளர்களுக்கு பணி தளவாடங்கள் வழங்க கேட்டு, தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர், கண்களில் கறுப்புத்துணி கட்டியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்படும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார்.
அதில், சாலைப்பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்குரிய கருவி தளவாடங்கள் மற்றும் காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்களில் கறுப்புத்துணி கட்டியபடி கோசம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் ரவி, மாநில துணைத்தலைவர் சிங்கராயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
