/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலைப்பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்
/
சாலைப்பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்
ADDED : ஜன 21, 2025 06:37 AM
நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர், நேற்று மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க துணைத்தலைவர் வேலு தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்நாதன், கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்-போது, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்-பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். சாலை பணியா-ளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் என்-பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட
செய-லாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செய-லாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.