/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோர மரக்கன்று நடும் பணி ஆய்வு
/
சாலையோர மரக்கன்று நடும் பணி ஆய்வு
ADDED : ஜூலை 04, 2025 01:21 AM
ராசிபுரம், பசுமையான சாலைகள் மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குதல் என்ற நோக்கில், மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல், மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த, 2023 முதல் மாநில நெடுஞ்சாலைத்துறையினர், மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு சேலம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். மேலும், பராமரிப்பு பணிகளான புதர்களை அகற்றுதல், தடுப்புச்சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், சாலையோர மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், சிறுபாலங்களை சுத்தம் செய்தல் போன்ற பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.
ஆய்வின் போது ராசிபுரம் புறவழிச்சாலையில் மரக்கன்று நடப்பட்டது. பருவமழை பேரிடர் காலங்களில் செயல்படுத்தப்படும் முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்டப்பொறியாளர் ஜெகதீஸ்குமார் உடனிருந்தார்.