/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
/
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ADDED : செப் 25, 2025 02:04 AM
ப.வேலுார் :திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துாரை சேர்ந்தவர் ரங்கராஜ் மகன் நவீன், 26; கட்டட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர் அருண் மகள் கார்த்திகா, 19; இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு, இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கார்த்திகாவுக்கு, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதையறிந்த காதல் ஜோடி, நேற்று காலை வீட்டைவிட்டு வெளியேறி, ப.வேலுார் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து, ப.வேலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். பேச்சுவார்த்தையில், இருவீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும், காதல் ஜோடிகள் மேஜர் என்பதால், இருவரையும் பாதுகாப்பாக உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.