/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சத்துணவில் அழுகிய முட்டை: சமையலர் உதவியாளர் இடமாற்றம்
/
சத்துணவில் அழுகிய முட்டை: சமையலர் உதவியாளர் இடமாற்றம்
சத்துணவில் அழுகிய முட்டை: சமையலர் உதவியாளர் இடமாற்றம்
சத்துணவில் அழுகிய முட்டை: சமையலர் உதவியாளர் இடமாற்றம்
ADDED : மார் 13, 2024 02:25 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
யூனியனுக்குட்பட்ட, களியனுார் பகுதியில் உள்ள அரசு
துவக்கப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து
வருகின்றனர். கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் சத்துணவில் வழங்கிய
முட்டை அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து மாணவியர்,
தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று
மதியம், பள்ளிக்கு சென்ற பெற்றோர், சமையலர் உதவியாளரை சந்தித்து,
அழுகிய முட்டை குறித்து கேட்டுள்ளனர். அதற்கு உதவியாளர் அலட்சியமாக
பதிலளித்துள்ளார். இதையடுத்து, அழுகிய முட்டை வழங்கியது குறித்து
மாணவிகளிடம் வீடியோ பதிவு செய்து, நேற்று மாவட்ட கலெக்டரிடம் புகார்
அனுப்பினர். இதை தொடர்ந்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர்
(சத்துணவு) பள்ளிக்கு நேரில் வந்து, மாணவிகளிடம் விசாரணை நடத்தி,
சமையலர் உதவியாரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.