/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்கள், திருநங்கைகள் ஆட்டோ, டாக்சி வாங்க ரூ.1 லட்சம் உதவி
/
பெண்கள், திருநங்கைகள் ஆட்டோ, டாக்சி வாங்க ரூ.1 லட்சம் உதவி
பெண்கள், திருநங்கைகள் ஆட்டோ, டாக்சி வாங்க ரூ.1 லட்சம் உதவி
பெண்கள், திருநங்கைகள் ஆட்டோ, டாக்சி வாங்க ரூ.1 லட்சம் உதவி
ADDED : ஜூன் 20, 2025 01:14 AM
நாமக்கல்டிரைவிங் தெரிந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஆட்டோ, டாக்சி வாங்குவதற்கு தொழிலாளர் நல வாரியம் மூலம், ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இன்டர்நெட் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் பதிவு பெற்ற பெண், திருநங்கைகளுக்கு சொந்தமாக ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி வாகனம் வாங்குவதற்கு, 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர்களை, நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு வசதியாக நாமக்கல், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10:00 முதல் 12:00 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் tnuwwb.tn.gov.in என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பம் அப்லோட் செய்யலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, நலவாரியம் பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.