/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ம.சமுத்திரம் அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கல்
/
ம.சமுத்திரம் அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கல்
ம.சமுத்திரம் அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கல்
ம.சமுத்திரம் அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கல்
ADDED : நவ 12, 2025 01:10 AM
மல்லசமுத்திரம், ஆண்டுதோறும் ஜூலை, 15ஐ கல்வி வளர்சி நாளாக, தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில், மாவட்டம் மழுவதும் பல்வேறு பள்ளிகளிலில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, நேற்று, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம், பள்ளி பராமரிப்பு பணிக்காக, ஒரு லட்சம் ரூபாயை, கலெக்டர் துர்கா மூர்த்தி வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமலை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலாமணி, உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.