/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலர், எழுத்தர் கைது
/
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலர், எழுத்தர் கைது
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலர், எழுத்தர் கைது
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலர், எழுத்தர் கைது
ADDED : ஏப் 28, 2024 03:43 AM
நாமக்கல்: கோக்கலை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 1.17 கோடி ரூபாய் மோசடி செய்த சங்க செயலாளர், எழுத்தரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட எஸ்.கோக்கலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு, பயிர் கடன், நகைக்கடன், மத்தியகால கடன், மாற்றுத்திறனாளி கடன், இட்டுவைப்பு கடன், உரம் மற்றும் உறுப்பினரிடம் தொகை வசூலித்து, சங்கத்தில் வரவு வைக்காதது உள்ளிட்ட இனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உத்தரவுப்படி, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடன் சங்கத்தில், கடந்தாண்டு, 2023 டிச., 18ல் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு கோடியே, 17 லட்சத்து, 79,644 ரூபாய் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளர் கிருஷ்ணன், கடந்த, 17ல் இந்த முறைகேடு குறித்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்க செயலாளர் அ.பெரியசாமி, 56, எழுத்தர் பெரியசாமி, 58 ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம், சங்க உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

