/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காரில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு
/
காரில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு
ADDED : ஆக 10, 2025 12:50 AM
ப.வேலுார், டிராக்டர் கம்பெனி மேனேஜரின் காரில் வைத்திருந்த பணத்தை, மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை சேர்ந்தவர் வேல்முருகன், 55, இவர், ப.வேலுாரில் உள்ள மகேந்திரா டிராக்டர் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, ப.வேலுாரில் உள்ள இந்தியன் வங்கியில், 1.50 லட்சம் ரூபாயை தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டு, ப.வேலுார் பள்ளி சாலைக்கு தன் காரில் வந்தார். அப்போது, அப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு, டைலர் கடைக்கு சென்று தன் மகன் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுத்துள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது, காரில் வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாயை காணவில்லை. அதிர்ச்சியடைந்த வேல்முருகன், காரில் வைத்திருந்த பணம் திருட்டு போனது குறித்து, ப.வேலுார் போலீசில் புகாரளித்தார்.
போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சி.சி.டி.வி.,' கேமரா வில் ஆய்வு செய்து பார்த்தபோது காரை பின் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கார் கதவை திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றது தெரிய
வந்தது.
காரில் இருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை, ப.வேலுார் போலீசார் தேடி வருகின்றனர்.