/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5,000 தள்ளுபடி
/
வரும் 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5,000 தள்ளுபடி
வரும் 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5,000 தள்ளுபடி
வரும் 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5,000 தள்ளுபடி
ADDED : அக் 05, 2025 01:24 AM
நாமக்கல், 'வரும், 31க்குள் சொத்து வரியை செலுத்தினால், அதிகபட்சம், 5,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 2025-26-ம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும், 31க்குள் செலுத்தும் பட்சத்தில், இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரி விகிதாசாரத்தில், 5 சதவீதம் முதல், அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.மேலும், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும், 2025-26-ம் நிதியாண்டின், அனைத்து நிலுவை மற்றும் நடப்பு வரி மற்றும் கட்டணங்களை, வரும், 31க்குள் செலுத்தி அபராதங்களை தவிர்த்து, அரசு வழங்கும் தள்ளுபடியை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.