/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கேரி பேக்' விற்றவருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு
/
'கேரி பேக்' விற்றவருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு
'கேரி பேக்' விற்றவருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு
'கேரி பேக்' விற்றவருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு
ADDED : ஏப் 13, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜீ தலைமையிலான அலுவலர்கள், ஊழியர்கள், சேலம் சாலை, நாமக்கல் சாலை, ஆத்துார் பிரதான சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, டூவீலர் மூலம் கேரி பேக்குகள் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை-யடுத்து, 50 கிலோ கேரி பேக்குகளை பறிமுதல் செய்து, டூவீ-லரை ஓட்டிவந்த உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.