/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யணும்'
/
'சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யணும்'
'சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யணும்'
'சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யணும்'
ADDED : ஜூலை 25, 2024 01:27 AM
நாமக்கல்: 'சென்னை மெட்ரோ ரயில், 2ம் கட்ட பணிக்கு, மத்திய அரசு ஏற்க-னவே அறிவித்த, 63,246 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ராஜ்யசபா கூட்டத்தொ-டரில், எம்.பி., ராஜேஸ்குமார் கோரிக்கை வைத்தார்.டில்லியில் நடந்து வரும் ராஜ்யசபா கூட்டத்தொடரில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசியதாவது:கடந்த, 2021-22ம் ஆண்டு நிதி அறிக்கை உரையில், மத்திய நிதி அமைச்சர், 'சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், 2ம் கட்ட பணிக்காக, 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என, அறிவித்தார்.
பொது முதலீட்டு வாரியம், 2021ல் இதற்கான பரிந்துரையை அளித்தது. இந்நிலையில், இந்த திட்டம், கடந்த, 3 ஆண்டுகளாக பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் (சி.சி.இ.ஏ.,) ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதனால், திட்டத்திற்கான முழு செலவையும், மாநில அரசே ஏற்க வேண்டி-யுள்ளது. இந்த தாமதம், மாநிலத்தின் நிதிநிலையை கடுமையாக பாதிக்கிறது.மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரிடம் இதைப்பற்றி நான் ஒரு கேள்வியை எழுப்பினேன். அதற்கு, 118.9 கி.மீ., துாரம், சென்னை மெட்ரோ ரயில், 2ம் கட்ட திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது என்றும், திட்டத்தின் அனுமதி சாத்தியக்கூறுகளை பொறுத்தது என்றும் பதில் வந்தது.சென்னை மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் தொகை, 1.2 கோடி. ஒரு சதுர கி.மீ.,க்கு, 26,533 பேர் வசிப்பது மிகவும் மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நகரமாக, சென்னை விளங்கி வருகிறது.இதனால் நகரில் எல்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக-ளவில் உள்ளது. எனவே, இங்கு, 2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவை அவசியமாக தேவைப்படுகிறது. மத்திய அரசு, ஏற்கனவே அறிவித்த நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.