ADDED : மார் 20, 2026 07:26 AM

நாமக்கல்:ஆவணம் இன்றி முட்டை லாரியில் கொண்டு வரப்பட்ட, 6.57 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்-தனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்-டத்தில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, 13 இடங்களில் தற்காலிக சோதனை சாவ-டிகள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்-காணிப்பு குழுவினரும், ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல்-பரமத்தி சாலை, கீரம்பூர் டோல்-கேட்டில் கார்த்திகேயன் தலைமையிலான பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த, முட்டை லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எவ்வித ஆவணமும் இன்றி, 4.07 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், நாமக்கல் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், மற்றொரு முட்டை லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ஆவணமின்றி, 2.50 லட்சம் ரூபாய் கொண்டு சென்றது தெரியவந்தது. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்-தனர். இதையடுத்து, அந்த தொகைக்கான உரிய ஆவணங்கள் கொண்டு வரப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்ப-டைக்கப்பட்டது. அதையடுத்து பறிமுதல் செய்த பணம், வாகன உரிமையாளரிடம் வழங்கப்பட்டது.
வியாபாரம் செய்வதற்காக கொண்டு செல்லும் பணத்திற்கு, உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.
