ADDED : மார் 21, 2026 06:31 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு பகுதியில், நேற்று மாலை பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்-றிய பொறியாளர் தங்கராஜ் தலைமையில் பறக்-கும்படை அதிகாரிகள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே வந்த இளைஞரை சோதனை செய்தனர். அவரிடம், 2 லட்சத்து, 4,400 ரூபாய் இருந்தது. ஆனால், அதற்கு உரிய ஆவணம் இல்லாதது தெரியவந்-தது.
விசாரணையில், ஈரோடு ஜியோ மெட்ரோ மார்ட் ஊழியர் என்பதும், மளிகை பொருட்கள் வினி-யோகம் செய்த கடைகளில் இருந்து வசூலித்த பணம் என்பதும் தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவ-ணத்தை காண்பித்து பணத்தை பெற்று செல்ல அறிவுறுத்தினர்.* நாமகிரிப்பேட்டை அருகே, ஆயில்பட்டி பகு-தியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரி முன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறி-யாளர் பிரபின்குமார் தலைமையில், எஸ்.எஸ்.ஐ., சசிகுமார் மற்றும் போலீசார் வாக-னங்களை சோதனை செய்தனர். அப்போது, முட்டை வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்-டனர். அதில் வைத்திருந்த, 4.92 லட்சம் ரூபாய் இருந்தது. விசாரணையில், மலையாம்பட்டி பகு-தியை சேர்ந்த வசந்தகுமார், 25, என்பதும், சென்-னையில் முட்டைகளை விற்பனை செய்துவிட்டு, வசூல் தொகையை எடுத்து சென்றது தெரியவந்-தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல்
செய்தனர்.
* வெண்ணந்துார் அடுத்த சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, கீரனுார் அருகே வாகன சோதனை நடந்தது. அப்போது, 'பொலிரோ' பிக் அப் வேனில், புதுச்சத்திரம், பள்ளிப்பட்டு பகு-தியை சேர்ந்த சங்கர், 50, என்பவர், உரிய ஆவண-மின்றி, 67,260 ரூபாய் எடுத்து சென்றார். அதை பறிமுதல் செய்து,
கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், சேலம் பகுதியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற, 'தோஸ்த்' வண்டியை சோதனை-யிட்டனர். அதில், பொத்தனுார் பகுதியைச் சேர்ந்த சண்முகம், 56, என்பவர் எடுத்து சென்ற, 95,000 ரூபாய்க்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
