ADDED : ஏப் 15, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம் : ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பிரிவு அருகே, நேற்று மாலை நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். உதவி தோட்டக்கலை அலுவலர் வேலுமணி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த, 'டாடா ஈச்சர்' லாரியை நிறுத்தி
அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி, 91,650 ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், ஆத்துார், கொட்டவாடி பகுதியை சேர்ந்த சின்னதம்பி, 45, லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. பணத்திற்கு உரிய ரசீது இல்லாததால், அதிகாரிகள் அந்த பணத்தைப் பறிமுதல் செய்து, ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
