/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3 ஆண்டில் ரூ.261 கோடி ரூபாய் நலத்திட்ட உதவி கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் தகவல்
/
3 ஆண்டில் ரூ.261 கோடி ரூபாய் நலத்திட்ட உதவி கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் தகவல்
3 ஆண்டில் ரூ.261 கோடி ரூபாய் நலத்திட்ட உதவி கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் தகவல்
3 ஆண்டில் ரூ.261 கோடி ரூபாய் நலத்திட்ட உதவி கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் தகவல்
ADDED : அக் 01, 2024 07:08 AM
நாமக்கல்: 'தமிழக அரசு பொறுப்பேற்ற பின், இதுவரை, நான்கு லட்சத்து, 7,850 பேருக்கு, 261 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன' என, கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் கூறினார்.
நாமக்கல் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில், கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில், தொழிலாளர்கள் பதிவு குறித்து தொழிற்சங்க பிரநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி வரவேற்றார். கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமை வகித்து, தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, 3 லட்சத்து, 30,249 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு பொறுப்பேற்ற பின், இதுவரை, நான்கு லட்சத்து, 7,850 பேருக்கு, 261 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், 2011ல், தொழிலாளர் நல வாரியத்தில், 33 லட்சம் பேர் இருந்த நிலையில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 13 லட்சம் பேர் இருந்தனர். மீதமுள்ள, 20 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தற்போது, 11 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த, 3 ஆண்டுகளில், அனைத்து நிதிகளும் இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1,670 கோடி ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.வீடு வழங்கும் திட்டத்தில் வயசு தொடர்பான சில பிரச்னை இருப்பதால், அவற்றை எளிமைப்படுத்த தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அறிவிப்பு வந்தவுடன் வீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில், 3 ஆண்டுகளில், 68,170 பேருக்கு, 6.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை பொறுத்தவரை, 29,650 பேருக்கு வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.