ADDED : அக் 03, 2025 01:41 AM
நாமகிரிப்பேட்டை,
நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன் குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. வடதமிழக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ராஜராஜன் பேசுகையில், ''நுாற்றாண்டு விழாவில் நாம் சில உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். சுய ஒழுக்கம், சுற்றுசூழல் துாய்மை, சுதேசி பொருட்களை பயன்படுத்துவது, தன்னுடைய நாடு என்ற பெருமை ஆகியவற்றை நாம் முதன்மையாக கொண்டு செயல்பட வேண்டும்,'' என்றார்.
நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விக்னேஷ் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சீருடை அணிந்திருந்த நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் பயிற்சி செய்து காண்பித்தனர். மாவட்ட நிகழ்ச்சி பொறுப்பாளர் நடராஜன், பா.ஜ., மாநில நிர்வாகிகள் லோகேந்திரன், கார்த்தீஸ்வரன், ஒன்றிய தலைவர் சரவணன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விஜயதசமி விழா
பொத்தனூரில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவு மற்றும் விஜயதசமி விழா நேற்று நடந்தது.
விழாவில் ஈரோடு கோட்ட பொறுப்பாளர் மோகன்ராஜ் பேசுகையில், '' பக்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல், தலைமைப் பண்பு முதலான நற்குணங்களின் திகழ்ந்த பாரதத்தின் பெருமைகளை ஆர்.எஸ்.எஸ்., செய்து வருகின்றது. ஆர்.எஸ்.எஸ்., பிரச்சாரம் என்ற ஆரம்ப பணியில் இருந்து ஒவ்வொரு ஸ்வயம் சேவகர்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். தேச வளர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., பாடுபட்டுக்கொண்டு இருக்கிறது,'' என்றார்.
விழா ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்., நாமக்கல் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.