/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை வசதி கேட்டு மக்கள் மறியல் உடனடியாக நிறைவேற்றிய ஆர்.டி.ஓ.,
/
சாலை வசதி கேட்டு மக்கள் மறியல் உடனடியாக நிறைவேற்றிய ஆர்.டி.ஓ.,
சாலை வசதி கேட்டு மக்கள் மறியல் உடனடியாக நிறைவேற்றிய ஆர்.டி.ஓ.,
சாலை வசதி கேட்டு மக்கள் மறியல் உடனடியாக நிறைவேற்றிய ஆர்.டி.ஓ.,
ADDED : அக் 29, 2025 01:24 AM
வெண்ணந்துார்,வெண்ணந்துார் யூனியன், மின்னக்கல் பஞ்., பகுதிக்கு, ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள நாச்சிப்பட்டி பிரிவு பகுதியில் இருந்து மதுக்கண் காடு, கோழிக்காடு, ஆண்டிக்காடு பகுதிக்கு செல்லும் சாலையை, 50 ஆண்டுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அந்த சாலை தனிநபர் பட்டா நிலம் எனக்கூறப்படுகிறது. அந்த சாலையில், வாகனங்கள் சென்றுவர முடியாதபடி குழி தோண்டி வைத்துள்ளதாக, அப்பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலை, நாச்சிப்பட்டி பிரிவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற ஆர்.டி.ஓ., சாந்தி, ராசிபுரம் தாசில்தார் சசிகுமார், பி.டி.ஓ., கிருஷ்ணன் டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஆர்.டி.ஓ., சாந்தி, ''பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் சாலையை, சேதப்படுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதனால், சாலையை மீண்டும் பயன்படுத்தலாம்,'' என்றார். மேலும், குழிதோண்டிய இடங்களில் மண் கொட்டி சமன்படுத்த உத்தரவிட்டு சீரமைத்தார். இதனால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து, கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

