தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஊரக வளர்ச்சித்துறை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை கோரிக்கை ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 19, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் பி.டி.ஓ., அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலவிநாயகம் தலைமை வகித்தார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மைய அறிவிப்பின்படி, சென்னை தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் உள்ள இணை இயக்குனர் பணியிடங்கள், மாவட்டங்களில் உள்ள மகளிர் திட்டங்களின் திட்ட இயக்குனர் பணியிடங்களையும், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து உதவி திட்ட அலுவலர் பணியிடங்களையும், தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் உள்ள இணை இயக்குனர், உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us