ADDED : அக் 31, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம், எலச்சிபாளையத்தில், ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பணிபார்வையாளர் செந்தில்குமார் மரணத்திற்கு காரணமான, புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதாவின் அராஜகபோக்கை கண்டித்தும், தமிழக அரசு அவர் மீது சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பி.டி.ஓ.,அலுவலகங்கள் முன்பாக, மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, எலச்சிபாளையம் பி.டி.ஓ.,அலுவலகம் முன்பாக நடந்த ஆர்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலவிநாயகம் தலைமை வகித்தார். ஏராளமான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

