/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வையப்பமலை யூனியன் புதிதாக உருவாக்கணும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாட்டில் முடிவு
/
வையப்பமலை யூனியன் புதிதாக உருவாக்கணும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாட்டில் முடிவு
வையப்பமலை யூனியன் புதிதாக உருவாக்கணும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாட்டில் முடிவு
வையப்பமலை யூனியன் புதிதாக உருவாக்கணும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாட்டில் முடிவு
ADDED : பிப் 16, 2025 03:24 AM
நாமக்கல்: 'எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியங்களை பிரித்து, வையப்பமலை ஒன்றியத்தை புதிதாக உருவாக்க வேண்டும்' என, மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின், மாவட்ட மாநாடு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். இணை செய-லாளர் பிரபுசங்கர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலவிநா-யகம், பொருளாளர் லோகமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் திருவரங்கன், மாநில செய-லாளர் வீரகடம்பகோபு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர், கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.மாநாட்டில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதி-வறை எழுத்தர் மற்றும் ஈப்பு ஒட்டுனர் பணியிடங்களை உடனடி-யாக நிரப்ப வேண்டும். கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டங்களுக்கு, தனி ஊழியர் கட்டமைப்பை வழங்க வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், சத்துணவு திட்டத்தில், 60 சதவீதம் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையலர் உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உதவியாளர் மற்றும் இள-நிலை உதவியாளர் பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் நிலையிலிருந்து உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். பஞ்., செயலர்க-ளுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுப்பு சலுகைகள் வழங்க வேண்டும். எலச்-சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியங்களை பிரித்து, வையப்பமலை ஒன்றியத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்-பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

