/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போகி பண்டிகைக்கு வீடுகளில் காப்பு கட்ட ஆவாரம்பூ, பூளாப்பூ, வேப்பிலை விற்பனை 'ஜோர்'

ADDED : ஜன 13, 2025 02:43 AM
நாமக்கல்,: இன்று போகி பண்டிகையையொட்டி, வீடு, வர்த்தக நிறுவ-னங்கள், வாகனங்களில் காப்பு கட்டுவதற்காக, ஆவாரம்பூ, பூளாப்பூ, வேப்பிலை விற்பனை ஜோராக நடந்தது.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பது போகி பண்டி-கையின் சுருக்கமான விளக்கமாக பார்க்கப்படுகிறது. இந்தாண்டு பொங்கள் விழா, இன்று போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. போகி என்றாலே, பழைய
குப்பைகளை தீயிட்டு கொளுத்துவது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், மழை தெய்வமான இந்திரனுக்கு வழிபாடு நடத்தும் பண்டிகையாகவும் போகி உள்ளது.
இந்த வழிபாட்டில் விவசாயிகள் நல்ல விளைச்சலுக்காக மனமு-ருகி இறைவனை வழிபடுகின்றனர். விவசாயத்திற்கு உதவும் கரு-விகளை அன்று வணங்கி நன்றி செலுத்துகின்றனர். பழைய பொருட்களை மட்டுமின்றி, எதிர்மறையான பழைய சிந்தனைக-ளையும் மாற்றி, புதிய அத்தியாயத்திற்குள் நுழையும் வாய்ப்பா-கவே போகி கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையில், சாமந்தி மாலை, மாவிலைகள், ஆவாரம்பூ, பூளாப்பூ, வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, வீடு, வர்த்தக நிறு-வனங்கள், வாகனங்களில் காப்பு கட்டி, போகி பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதற்காக, நாமக்கல் மாவட்டம் முழு-வதும், ஆவாரம்பூ, பூளாப்பூ விற்பனை ஜோராக நடந்தது. நாமக்கல் நகரில், மோகனுார் சாலை, உழவர்சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி சென்றனர்.