/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மீண்டும் சூடுபிடித்த 'ஷவர்மா' விற்பனை;ஓட்டல்களில் உணவுத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்

ADDED : பிப் 23, 2024 01:39 AM
எருமப்பட்டி:நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, 'ஷவர்மா' விற்பனை, தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதனால், உணவுத்துறை அதிகாரிகள், ஓட்டல்களை கண்காணிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு செப்., மாதம் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ஓட்டலில், 'ஷவர்மா' சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதை தொடர்ந்து, பல்வேறு ஓட்டல்களில் செய்யப்பட்ட சோதனையில், கெட்டுப்போன கிரில் சிக்கன், இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில், 'ஷவர்மா' விற்பனை செய்வதற்கு தடைவிதித்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கெடுபிடியால், அப்போது பல இரவு நேர ஓட்டல்கள் மூடப்பட்டன. தற்போது, மீண்டும் ஓட்டல்களில், 'ஷவர்மா' விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனை உணவுத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், ''ஷவர்மா விற்பனைக்கு கடந்தாண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் தடை நீக்கப்பட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருண் கூறியதாவது:கடந்தாண்டு செப்.,ல் 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார். அதன்பின், மாவட்டத்தில் ஷவர்மா விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, 'ஷவர்மா' தயார் செய்யும் மாஸ்டர்களுக்கு, இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், கிரில் சிக்கன், ஷவர்மா விற்பனை செய்யப்படும் ஓட்டல்களில் அடிக்கடி சோதனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.