/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊதிய உயர்வு கேட்டு துாய்மை பணியாளர் மனு
/
ஊதிய உயர்வு கேட்டு துாய்மை பணியாளர் மனு
ADDED : நவ 04, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி துாய்மை பணியாளர்கள், மத்திய அரசு தேசிய ஆணையத்திற்கு அனுப்பி-யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கார்கூடல்பட்டி ஊராட்சியில், 24 துாய்மை பணியாளர்கள் பணி-யாற்றி வருகின்றோம். எங்களுக்கு தினந்தோறும், 166 ரூபாய் வீதம் மாதம், 5,000 ரூபாய் மட்டும் ஊதியமாக வழங்கப்படுகி-றது.
எங்களுடைய கண்காணிப்பாளர்களுக்கு தினந்தோறும், 319 ரூபாய் வீதம் மாதம், 9,500 ரூபாய் வழங்கப்படுகிறது. எங்க-ளுக்கும், 9,500 ரூபாய் ஊதியம் வழங்க ஆவன செய்ய வேண்டு-கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.