/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
/
துாய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
துாய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
துாய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
ADDED : ஜூலை 11, 2025 01:55 AM
நாமக்கல், :'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட துாய்மை பணியாளருக்கு சாதகமான தீர்ப்பு எதிரொலியால், தொடர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். அதனால், கடந்த, 11 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
நாமக்கல், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் என, 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் இடையே பணி நேரம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த துாய்மை பணியாளர்கள், 121 பேரை ஒப்பந்த நிறுவனம் திடீரென டிஸ்மிஸ் செய்தது.
இதை தொடர்ந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட, 121 துாய்மை பணியாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக, 100க்கும் மேற்பட்டோரும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து, கடந்த, 29 முதல், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, 'ஒப்பந்த நிறுவனம், ஒப்பந்த படிவத்தில் கூறப்பட்டுள்ள வேலை நேரத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. தொழிலாளர் வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., போன்றவை வரவு வைப்பதில்லை' என, குற்றம் சாட்டினர்.
மேலும், தங்களை டிஸ்மிஸ் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இடைக்காலமாக இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த, 11 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துாய்மை பணியாளர்கள், நேற்று போராட்டத்தை வாபஸ் பெற்று மீண்டும் பணிக்கு திரும்பினர்.