/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துளிர்க்கும் முன்பே அழியும் மரக்கன்றுகள்
/
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துளிர்க்கும் முன்பே அழியும் மரக்கன்றுகள்
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துளிர்க்கும் முன்பே அழியும் மரக்கன்றுகள்
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துளிர்க்கும் முன்பே அழியும் மரக்கன்றுகள்
ADDED : ஆக 26, 2025 01:45 AM
ராசிபுரம், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள, 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் துளிர்விடும் முன்பே அழிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்றும்போது, அதற்கு பதிலாக, 10 மரக்கன்றுகளை நடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல் நெடுஞ்சாலைத்துறையினர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நடப்பட்டு பல இடங்களில் நன்றாக வளர்ந்து வருகிறது. மேலும், பல மரக்கன்றுகளை நட்டு
பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலங்களுக்கு இடையே சர்வீஸ் சாலை அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. சர்வீஸ் சாலை அமைக்கும்போது ஏற்கனவே புதிதாக நடப்பட்ட மரங்களையும் வெட்டி வருகின்றனர். முக்கியமாக ராசிபுரத்தில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் சாலையில் பல இடங்களில் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்த மழைக்காலத்தில் நன்றாக துளிர்க்கும் முன், இவைகளை சாலை அகலப்படுத்தும் பணிக்கு அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 'சாலை அகற்றும் பணி நடப்பது தெரிந்தும் குறிப்பிட்ட இடங்களில் ஏன் மரக்கன்றுகளை வைத்து வீணாக்குகின்றனர்' என விவசாயிகள், பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளனவா, அவைகள் நன்றாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.