sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சனிக்கிழமை விடுமுறை: ஆசிரியர்கள் வரவேற்பு

/

சனிக்கிழமை விடுமுறை: ஆசிரியர்கள் வரவேற்பு

சனிக்கிழமை விடுமுறை: ஆசிரியர்கள் வரவேற்பு

சனிக்கிழமை விடுமுறை: ஆசிரியர்கள் வரவேற்பு


ADDED : அக் 13, 2024 08:42 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழகத்தில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையில் திருத்தம் செய்து, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்துள்ளதற்கு, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்-ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நேரடி நியமனம் பெற்ற முதுநிலை ஆசிரி-யர்கள் சங்க தலைவர் ராமு,

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கண்-ணப்பன்

ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:அரசு பள்ளிகளுக்காக, பள்ளிக்கல்வித்துறை மூலம், 2024-25ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டி

வெளியிட்டு கருத்து ஆலோ-சனை பெறப்பட்டது. இதனடிப்படையில், நேரடி நியமனம் பெற்ற

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்-வேறு ஆசிரியர் சங்கங்கள், அனைத்து

சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த

கோரிக்கையை ஏற்று, மீண்டும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை

அளித்தும், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்கான வேலை நாட்களை, 210க்கும் குறை-யாமல்

இருக்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் தொடர்புடைய

விதிகள் அடிப்படை-யிலும் உரிய திருத்தங்களை செய்து பள்ளிகளுக்கான வேலை நாட்கள்

அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை வர-வேற்பதுடன், பள்ளிக்கல்வித்துறை

அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்-வித்துறை செயலாளருக்கு நன்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us