ADDED : ஜூலை 04, 2026 04:04 AM

அ நிறம் | அளவு
நாமக்கல்:நடப்பு,
2026-27ம் கல்வியாண்டிற்கான, பள்ளி அளவிலான செஸ் போட்டி,
மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், நடந்தது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடந்த போட்டியை, தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்து
துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் செல்லம்மாள், உடற்கல்வி
ஆசிரியர்கள் சரவணன், அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில்,
முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவர்கள், வரும், 14ல் நடக்கும் ஒன்றிய
அளவிலான போட்டியில் கலந்துகொள்வர். அதில், முதல் மூன்று இடங்களை
பெறும் மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியிலும், இதில், முதல்
மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டியிலும்
பங்கேற்பர்.
