ADDED : மார் 15, 2024 02:50 AM
பள்ளிப்பாளையம்,:வெப்படை
பகுதியில், குட்கா விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல்
வைக்கப்பட்டு தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பள்ளிப்பாளையம்
அருகே வெப்படை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான மளிகை
கடைகள், பெட்டி, டீக் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை
பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மாலை
பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் மற்றும் வெப்படை
போலீசார் இணைந்து மளிகை கடை, டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது
வெப்படை பகுதியில் உள்ள, உமா மளிகை கடை, சுந்தரம் டீ ஸ்டால் ஆகிய
கடைகளில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பான் மசாலா
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு கடைகளுக்கும்
சீல் வைக்கப்பட்டது. பின்னர் இரு கடைகளுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டது.

