/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லூரியில் பருவ கால மாற்றம் குறித்த விழிப்புணர்வு
/
அரசு கல்லூரியில் பருவ கால மாற்றம் குறித்த விழிப்புணர்வு
அரசு கல்லூரியில் பருவ கால மாற்றம் குறித்த விழிப்புணர்வு
அரசு கல்லூரியில் பருவ கால மாற்றம் குறித்த விழிப்புணர்வு
ADDED : ஜன 05, 2024 11:33 AM
நாமக்கல்: நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் பருவ கால மாற்றம் குறித்த விழிப்
புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமை மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட உதவி வன பாதுகாவலர் சானு வாஸ்கான், பருவ காலம் மாற்றம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், மாணவர்களுக்கு மீண்டும் மஞ்சள் பை திட்டத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கினார். மாவட்ட பசுமை இயக்க தொடர்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் மரம் நடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். முதலமைச்சரின் வனத்துறை சார்ந்த திட்ட ஆராய்ச்சியாளர் கிஷோர், காலநிலை மாற்றம் குறித்து விழிப்
புணர்வு ஏற்படுத்தினார்.
ஏற்பாடுகளை, கல்லுாரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர பாண்டியன், பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்தனர்.