/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட கோவில்களில் பாதுகாப்பு பணி; முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
/
மாவட்ட கோவில்களில் பாதுகாப்பு பணி; முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
மாவட்ட கோவில்களில் பாதுகாப்பு பணி; முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
மாவட்ட கோவில்களில் பாதுகாப்பு பணி; முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
ADDED : அக் 16, 2024 07:25 AM
நாமக்கல்: கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் உள்ள கீழ்கண்ட கோவில்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட, 62 வயதிற்குட்பட்ட முன்னாள் படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில், மோகனுார் அசலதீபேஸ்வரர், புதுச்சத்திரம் அழியா இலங்கையம்மன் கோவில், சேந்தமங்கலம் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில்.
பிரசன்ன வெங்கட்ரமன சுவாமி கோவில், எருமப்பட்டி கந்தகிரி பழனியாண்டர் கோவில், ராசிபுரம் மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில், கைலாசநாதர் கோவில், அலவாய்பட்டி ஏகாம்பரேஸ்வரர் கோவில், வெண்ணந்துார் அத்தனுார் அம்மன் கோவில், ஒடுவன் குறிச்சி, காசி விஸ்வநாதர் கோவில், புதுப்பட்டி துலக்க சூடாமணியம்மன் கோவில், மல்லசமுத்திரம் கந்தசாமி கோவில், மல்லசமுத்திரம் சோலீஸ்வரர் அழகுராய பெருமாள் கோவில், திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், மேலிப்பள்ளி அண்ணமார் கோவில். புத்துார் வரதராஜ பெருமாள் கோவில், சோலீஸ்வரர் கோவில், விட்டம்பாளையம் இளையபெருமாள் கோவில், எலச்சிபாளையம் சுப்ரமணிய சுவாமி கோவில், மொளசி முக்கணீஸ்வரர் கோவில், வெங்கடேச பெருமாள் கோவில், குமாரபாளையம் காளியம்மன் கோவில், பாண்டு ரங்கநாத கோவில், வேலகவுண்டம்பாளையம் அண்ணமார் கோவில், திருச்செங்கோடு நகர் பெரியமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் மல்லசமுத்திரம் கந்தசாமி கோவிலுக்கு, 2 நபர்களும் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வர் கோவிலுக்கு, 3 நபர்களும் மற்ற கோவில்களுக்கு, தலா ஒரு நபர் என, 32 காலிபணியிடங்கள் உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.