/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மாணவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல்; பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

ADDED : டிச 20, 2024 06:59 AM
நாமகிரிப்பேட்டை; நாமகிரிப்பேட்டை அருகே, பள்ளி மாணவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்த கலெக்டர், அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில், மாவட்ட கலெக்டர் உமா நேற்று காலை முதல் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். ராசிபுரம் உழவர் சந்தை, சிங்களாந்தபுரம், தொப்பப்பட்டி அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், தொ.ஜேடர்பாளையம் கூட்டுறவு பால் சொசைட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ததுடன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
தொப்பப்பட்டி அருகே ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, பள்ளி மாணவர் ஒருவர் பைக் ஓட்டிவந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் உமா, வாகனத்தை தடுத்து நிறுத்தி மாணவரிடம் விசாரித்தார். அவர், தொப்பப்பட்டி, தேவேந்திர தெருவை சேர்ந்தவர் என்றும், அருகில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மாணவருக்கு பைக் ஓட்டுவதற்கான வயதும் இல்லை; உரிமமும் இல்லை என்பது தெரியவந்தது. அருகில் இருந்த அதிகாரிகளிடம் கூறி, பைக்கை பறிமுதல் செய்து நாமகிரிப்பேட்டை போலீசாரிடம் கலெக்டர் உமா ஒப்படைத்தார். இது குறித்து ஆர்.டி.ஓ., விடம் புகார் தெரிவித்ததுடன், மாணவரின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.