ADDED : செப் 23, 2026 07:15 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம்
தனியார் மண்டபத்தில், நேற்று நடந்த திடக்கழிவு மேலாண்மை
கருத்தரங்கிற்கு, சேலம், நாமக்கல் மண்டல டவுன் பஞ்., உதவி இயக்குனர்
முகமது ரிஸ்வான் தலைமை வகித்தார். செயல் அலுவலர்(நிர்வாகம்) நீலாதேவி
முன்னிலை வகித்தார்.
இதில், எல்.இ.டி., ப்ரொஜெக்டர் அமைத்து, வீடு
வீடாக சென்று குப்பையை வாங்கி தரம் பிரித்தல், எளிய முறையில்
குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல் குறித்து, மல்லசமுத்திரம்
துப்புரவு அலுவலர் ராஜகணபதி விளக்கம் அளித்தார். தொடர்ந்து,
வரிதண்டலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
