தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குடிநீர் பிரச்னை முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளது சேந்தமங்கலம் தி.மு.க., வேட்பாளர் பூமலர் பேச்சு

குடிநீர் பிரச்னை முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளது சேந்தமங்கலம் தி.மு.க., வேட்பாளர் பூமலர் பேச்சு

குடிநீர் பிரச்னை முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளது சேந்தமங்கலம் தி.மு.க., வேட்பாளர் பூமலர் பேச்சு


ADDED : ஏப் 15, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம், ''ஆறு கோடி ரூபாயில், காரவள்ளியில் இருந்து சேந்தமங்கலத்திற்கு குடிநீர் குழாய் அமைத்து, குடிநீர் பிரச்னை முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளது,'' என, தி.மு.க., வேட்பாளர் பூமலர் பேசினார்.

சேந்தமங்கலம் தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுசாமியின் மகள் பூமலர் போட்டியிடுகிறார். அவர், சேந்தமங்கலம் டவுன் பஞ்., குப்பநாய்க்கனுார், அண்ணா நகர், மாதாகோயில், காந்திபுரம், கடைவீதி உள்ளிட்ட, 18 வார்டு பகுதிகளில், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் தனபாலன் ஆகியோருடன் சென்று, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். முதல்வர் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வந்துள்ளதால், மீண்டும் தி.மு.க., தொடர வேண்டும் என, விரும்புகின்றனர். கிராமங்கள் தோறும் முகாம் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 8,000 ரூபாய், 'கூப்பன்' வழங்கப்படும். மகளிர், முதியோர், மாணவர் என, அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல், ஆறு கோடி ரூபாயில், காரவள்ளியில் இருந்து சேந்தமங்கலத்திற்கு புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, குடிநீர் பிரச்னை முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளது. 1.24 கோடி ரூபாயில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டு, புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. 58 லட்சம் ரூபாயில், சிவன் கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. மேலும், சாதனைகள் தொடர, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து, பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ரோகா பிரியதர்ஷினி, மாவட்ட துணை செயலாளர் ராணி, போரூர் செயலாளர் கர்ணன், தவமனணி, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் கணேசன், துணை பொறுப்பாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us