/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தென்னை குத்தகைக்கு கடும் கிராக்கி சேந்தமங்கலம் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜூன் 17, 2025 02:27 AM
சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், எருமப்பட்டி யூனியனில் உள்ள காரவள்ளி, நடுக்கோம்பை, போடிநாய்க்கன்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கூலியாட்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் தென்னை மரங்களை அதிகம் நடவு செய்துள்ளனர்.
இந்த தென்னை மரங்கள் ஆண்டுக்கு, மூன்று முறை அறுவடை செய்யும் வகையில் மொத்தமாக குத்தகைக்கு விட்டு வருகின்றனர். இங்கு விளையும் தேங்காய்களில் எண்ணெய் சத்து அதிகமாகவும், தேங்காய் பருப்பு அடர்த்தி அதிகமாகவும் காணப்படுவதால், அறுவடை செய்யப்படும் தேங்காய்கள் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை குத்தகைக்கு எடுக்க, வெளியூரில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர். இந்தாண்டு இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை குத்ததைக்கு எடுக்க வியாபாரிகள் போட்டி போட்டு வருகின்றனர். இதனால், ஒரு தென்னை மரம், 1,300 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டிருந்த நிலையில், இந்தாண்டு, 1,500 ரூபாய் வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.