/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் காய்ச்சல் சிறப்பு முகாம்
/
சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் காய்ச்சல் சிறப்பு முகாம்
சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் காய்ச்சல் சிறப்பு முகாம்
சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் காய்ச்சல் சிறப்பு முகாம்
ADDED : நவ 02, 2025 12:51 AM
சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. மழையால் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மழைக்கால காய்ச்சல் முகாம், கடந்த, 17 முதல் நடந்து வருகிறது. மேலும், கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பருவ மழை காலங்களில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு, சேந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சுடையாம்பட்டி ஊராட்சியில், நடமாடும் மருத்துவமனை மூலம், நேற்று காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இதில், அப்பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடல் நிலையை பரிசோதித்து சென்றனர்.

