/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., முயற்சி ஒருபோதும் எடுபடாது கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேச்சு
/
பா.ஜ., முயற்சி ஒருபோதும் எடுபடாது கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேச்சு
பா.ஜ., முயற்சி ஒருபோதும் எடுபடாது கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேச்சு
பா.ஜ., முயற்சி ஒருபோதும் எடுபடாது கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேச்சு
ADDED : ஜூலை 03, 2025 01:49 AM
கரூர், ''தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற, பா.ஜ.,வின் முயற்சி ஒருபோதும் எடுபடாது,'' என, தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி பேசினார்.
கரூர் உழவர் சந்தை எதிரில், மாவட்ட தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி பேசியதாவது:
தமிழகத்தில், உரிய வளர்ச்சி திட்டப் பணிகளை மத்திய அரசு செயல்படுத்த மறுத்து வருகிறது. கல்வி, ரயில்வே உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி தர மறுக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். சில கட்சிகள் தேர்தலுக்காக கூட்டணியை அமைத்து கொள்கின்றன. அவர்கள், இருவேறு திசைகளில் பயணித்து கொண்டிருக்கின்றார். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜ.,வின் முயற்சி ஒருபோதும் எடுபடாது. அதற்காகத்தான் சில அடிமைகளை உடன் வைத்துக்கொண்டு, அந்த முயற்சியை முன்னெடுக்கின்றனர்.
மகளிர் உரிமை திட்டம், 1.15 கோடி பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இலவச பஸ் திட்டத்தில், லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் மூலம், 2 கோடிக்கு மேற்பட்டோர் பயன் பெறுகின்றனர். இந்த மாவட்டத்தில், கரூர் பஸ் ஸ்டாண்ட அருகில் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், 7 கோடி ரூபாயில் நுாலகம் கட்டுமான பணியை, நீதிமன்றம் மூலம் தடை பெற்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, பணிகள் நடந்து வருகிறது. கடவூரில், 250 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு கருத்து அனுப்பப்பட்டுள்ளது. அரசின் சாதனைகளை அனைத்து வீடுகளிலும் சொல்லி, உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, மாநகர செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி செயலாளர்கள் ராஜா, ஜோதிபாசு, குமார், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கரன், முத்துகுமரராஜா, வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.