/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பகவதி அம்மன் கோவிலில் அடியார்கள் உழவாரப்பணி
/
பகவதி அம்மன் கோவிலில் அடியார்கள் உழவாரப்பணி
ADDED : ஜூலை 15, 2024 01:09 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பகவதி அம்மன், ஆனந்த விநாயகர், பாலமுருகன் சுவாமிகள் உள்ளன. சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி மற்றும் வாரந்தோறும் வெள்-ளிக்கிழமை சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். இந்நிலையில், சிவ கண சேனை அடியார்கள் மன்றம் சார்பில், நேற்று கோவில் முழுதும் சுத்த செய்யும் பணி நடந்தது. 15க்கும் மேற்பட்ட அடி-யார்கள், காலை, 10:00 மணிக்கு உழவாரப்பணியை துவங்கி, மதியம், 2:00 மணி வரை செய்தனர். இதில், கோவில் கோபுரம் முதல் கோவில் வளாகம் வரை துாய்மைப்படுத்தினர். மாதந்-தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு கோவிலாக சுத்தம் செய்யும் பணி, சிவ கண சேனை அடியார்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.