/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
சக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஆக 13, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி, ஆணையாம்பட்டியில் உள்ள சக்தி பெரிய மாரியம்மன் கோவிலில், கடந்த, 7ல் காப்பு கட்டுதல், கம்பம் நடுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு, சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று, 30 அடி உயர தேரை, மேளதாளம் முழங்க ஏராளமான பக்தர்கள், 'ஓம் சக்தி, பராசக்தி' கோஷம் எழுப்பியபடி, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக இழுத்து வந்தனர். தேரில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

